இலங்கைத் தமிழ் திரைத்துறையில் சுமார் 20 ஆண்டுகளாகப் பயணித்து வரும் SR துஷிகரன், படத்தொகுப்பாளர், நடிகர், VFX கலைஞர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் எனப் பல்வேறு தளங்களில் தனது பங்களிப்பை வழங்கி வருகிறார்.
Ceylon Pictures நிறுவனத்தின் மூலம் தனது திரைப்படப் பணிகளை முன்னெடுத்து வரும் அவர், ஊடகவியலாளர் பாத்திமா நளீரா, ‘செந்தூரம்’ ஞாயிறு இதழுக்காக மேற்கொண்ட நேர்காணலில் தனது கலைப்பயணம், அனுபவங்கள் மற்றும் இலங்கைத் தமிழ் சினிமாவின் எதிர்காலம் குறித்து பகிர்ந்துள்ளார்.
‘ஹர்த்தால்’ முதல் TVK வரை
2007ஆம் ஆண்டு ‘குறும்பை’ குறும்படத்தின் குரல் பதிவின் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்த துஷிகரன், பின்னர் ‘ஹர்த்தால்’ மூலம் படத்தொகுப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்தார்.
அதனைத் தொடர்ந்து ‘அச்சம் தவிர்’, ‘பனைமரக்காடு’, ‘ஆழிக்கிளிஞ்சில்’, ‘கர்மா’, ‘மணல்’ உள்ளிட்ட பல படைப்புகளில் பணியாற்றியுள்ளார்.
தற்போது இயக்குநர் பிரவீன் கிருஷ்ணராஜாவின் ‘TVK’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதுடன், அதன் முதன்மைப் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.
குறும்படங்கள், முழுநீளத் திரைப்படங்கள், இசை ஆல்பங்கள் என 70-க்கும் மேற்பட்ட படைப்புகளில் தனது பங்களிப்பை வழங்கியுள்ள அவர், இயக்குநராகவும் பல படைப்புகளை உருவாக்கியுள்ளார்.
SR துஷிகரனின் முக்கியமான பார்வை
“கலைஞர்கள் ‘ஆதரவு தாருங்கள்’ என்று கேட்பதை விட, தரமான படைப்புகள் மூலம் மக்களை ரசிகர்களாக மாற்ற வேண்டும். ஒரு வலுவான பார்வையாளர் வட்டத்தை உருவாக்கி, சினிமாவை ஒரு தொழில்துறையாக வளர்த்தெடுப்பதே முக்கியம்.”
இந்தக் கருத்து, இலங்கைத் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்குத் தேவையான Audience Creation மற்றும் தரமான படைப்புகளின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
தனது நீண்டகால கலைப்பயணத்தில் ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு உள்ளிட்ட துறைகளில் பல்வேறு விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ள SR துஷிகரனின் திரைப்படப் பயணம் தொடர்ந்து முன்னேற Thirai Murasu ஊடகக் குழுமத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்