THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

யாழ்ப்பாணத்தில் இன்று பிரம்மாண்ட மாடல் தெரிவுப் போட்டி! — தமிழகப் பிரபலங்கள் வருகையுடன் `Sri Lankan Upcoming Model 2026` சிறப்பாக அரங்கேறுகிறது!

02 Aug, 2026

யாழ்ப்பாணம் 'Stylo Rami Model Academy' நிறுவனத்தின் நிறுவனர் ஹரன் ரம்மின்சன் அவர்களின் சிறப்பு ஏற்பாட்டில், இலங்கையின் வளர்ந்து வரும் இளம் திறமையாளர்களை அடையாளப்படுத்தி சர்வதேச தளத்திற்கு கொண்டு செல்லும் "Sri Lankan Upcoming Model 2026" மாபெரும் மொடலிங் அழகன் மற்றும் அழகித் தெரிவுப் போட்டி இன்று (2026 ஆகஸ்ட் 02, ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.00 மணிக்கு யாழ்ப்பாணத்தில் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது.


தமிழகத்திலிருந்து வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள்...

இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக தமிழகத்திலிருந்து பல்வேறு முன்னணி பிரபலங்கள் யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளனர். நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவினர் அவர்களை பொன்னாடை போர்த்தி மலர்க்கொத்து கொடுத்து பாரம்பரிய முறையில் வரவேற்றனர்.


சேவைச் செம்மல் மற்றும் உலக தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் சர்வதேசத் தலைவர் டொக்டர் எஸ். எம். ராஷ்மி ரூமி (அமெரிக்கா), சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை முன்னணி நடிகர் விஜய் ஆனந்த் (தமிழ்நாடு), டொக்டர் ஏ. ஆர். நிஷா MBA (புதுச்சேரி) மற்றும் அகில இந்திய சட்ட ஆலோசகர் டாக்டர் செண்பகம் ராஜா (USA) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டுள்ளனர்.


நிகழ்வில் பங்கேற்கும் பிரமுகர்கள்...

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ரஜீவன், தொழிலதிபர் மற்றும் உலகத் தமிழ் கலை பண்பாட்டு கலைக்கூடத்தின் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. ஷேக் அமானி உள்ளிட்ட கலை, பண்பாடு, அரசியல் மற்றும் தொழில்துறை சார்ந்த பல முக்கியப் பிரபலங்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.


நிகழ்வு விவரங்கள்...

நாள் & நேரம் — இன்று (02.08.2026, ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2.00 மணி, இடம் — நிழல் கஃபே அண்ட் ரெஸ்டாரன்ட், Royal VIP Hall, 139, பலாலி வீதி, உரும்பிராய், யாழ்ப்பாணம், தொடர்புகளுக்கு — +94 74 337 3497.


இலங்கையின் இளம் திறமையாளர்களை அடையாளப்படுத்தும் இந்த மாபெரும் முயற்சியை முன்னெடுத்துள்ள Stylo Rami Model Academy நிறுவனர் ஹரன் ரம்மின்சன் மற்றும் போட்டி அமைப்பாளர்கள் அனைவருக்கும் Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!




கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்