இலங்கைச் திரையுலகில் தனது கூர்மையான காட்சியமைப்புகளாலும், சமூகக் கதைக்களங்களினாலும் கவனம் ஈர்த்து வரும் இயக்குநர் பிரவீன் கிருஷ்ணராஜா (Praveen Krishnaraja) இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'TVK' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ 'Title Promo Video' (தலைப்பு முன்னோட்டம்) தற்போது வெளியாகி இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
"கூத்தாடி தலைவன் ஆவான்..." — மிரட்டலான அரசியல் நையாண்டி...
நையாண்டி அரசியல் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த முன்னோட்டத்தில், ஒரு கோமாளி (Joker/Clown) வேடமிட்ட மனிதனின் பின்னணியில், "கூத்தாடி ஒரு நாள் ஹீரோ ஆவான்... அந்த ஹீரோ ஒரு நாள் தலைவன் ஆவான்... அவன் மக்களுக்குச் சிரிக்க வச்சு அவன் தலைவனா இல்ல கூத்தாடியானான்னு மக்கள் முடிவு பண்ணிக்குவாங்க..." எனப் பின்னணியில் ஒலிக்கும் ஆக்ரோஷமான வசனங்கள் சமூக அரசியல் சூழலை மிகக் கூர்மையாகக் கேள்வி கேட்டுள்ளன.
வீடியோவின் இறுதியில் "தீயது வெல்லக் கேளீர்" என்ற சக்திவாய்ந்த முழக்கத்துடன் 'TVK' என்ற தலைப்பு போஸ்டராக விரிவடைவது சினிமா ஆர்வலர்கள் மத்தியில் பெரும் விவாதத்தையும் எதிர்பார்ப்பையும் தூண்டியுள்ளது.
தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பக் கூட்டணி...
சிலோன் மெட்டல் இண்டஸ்ட்ரி (Ceylon Metal Industry) வழங்க, வின்ட்சர் புரொடக்ஷன்ஸ் (Windsor Productions) மற்றும் லாஸ்ட் பெஞ்ச் பாய்ஸ் புரொடக்ஷன்ஸ் (Last Bench Boys Productions) இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் ரோனி (Rony), கவிப்ரியா (Kavi Priya), ஜனா RJ, விக்னேஷன், இம்ரான், ஜானு முரளிதரன் மற்றும் பல திறமையான கலைஞர்கள் நடித்துள்ளனர்.
கதிர் ராஜசேகரனின் (Kathir Rajasekaram) கூர்மையான ஒளிப்பதிவும், சகிஷ்னா சேவியரின் (Sagishna Xavier) துடிப்பான பின்னணி இசையும், SR. தூசிகரனின் கிரிஸ்ப்பான படத்தொகுப்பும் (Film Editor) இந்த டைட்டில் புரோமோவிற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளன.
புதுமையான சிந்தனையுடன் களமிறங்கியுள்ள 'TVK' திரைப்படத்தின் ஒட்டுமொத்தப் படக்குழுவிற்கும் Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்