இயக்குநர் பிரவீன் கிருஷ்ணராஜா இயக்கத்தில் உருவாகி வரும் 'TVK' திரைப்படம், முற்றிலும் ஒரு தமிழ் மொழித் திரைப்படமாக மட்டுமல்லாமல், தமிழ் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளையும் (Bilingual Film) மையமாகக் கொண்டு மிக பிரம்மாண்டமாகத் தயாராகி வருகிறது.
ஏற்கனவே இணையத்தைக் கலக்கிய 'Title Promo Video'...
ஏற்கனவே இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ 'Title Promo Video' வெளியாகி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்து இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. நையாண்டி அரசியல் த்ரில்லர் பாணியில் உருவான அந்த வீடியோவில், "கூத்தாடி ஒரு நாள் ஹீரோ ஆவான்... அந்த ஹீரோ ஒரு நாள் தலைவன் ஆவான்..." எனப் பின்னணியில் ஒலிக்கும் ஆக்ரோஷமான வசனங்களும், "தீயது வெல்லக் கேளீர்" என்ற முழக்கமும் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது.
இன்று வெளியான அதிகாரப்பூர்வ சிங்களத் தலைப்பு போஸ்டர்...
ஏற்கனவே வெளியான டைட்டில் புரோமோ வீடியோ தந்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, இத்திரைப்படத்தின் மிக முக்கியமான அடுத்த கட்டமாக, இன்று அதன் அதிகாரப்பூர்வ சிங்களத் தலைப்பு போஸ்டர் வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. இரு மொழி ரசிகர்களையும் ஒரே தளத்தில் கவரும் வண்ணம், இத்திரைப்படத்திற்குச் சிங்களத்தில் ‘ත්රිවිධ කැරැල්ල’ (Thrividha Keralla) எனத் தலைப்பிடப்பட்டு இந்த புதிய மிரட்டலான போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஒரு கோமாளி (Joker/Clown) வேடமிட்ட மனிதனின் பின்னணியில், அரசியல் போராட்டக் குறியீடுகளுடன் சிலோன் மெட்டல் இண்டஸ்ட்ரி (Ceylon Metal Industry) வழங்க, வின்ட்சர் புரொடக்ஷன்ஸ் (Windsor Productions) மற்றும் லாஸ்ட் பெஞ்ச் பாய்ஸ் புரொடக்ஷன்ஸ் (Last Bench Boys Productions) இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் ரோனி (Rony), கவிப்ரியா (Kavi Priya), ஜனா RJ மற்றும் பல திறமையான கலைஞர்கள் நடித்துள்ளனர்.
கதிர் ராஜசேகரனின் கூர்மையான ஒளிப்பதிவும், சகிஷ்னா சேவியரின் (Sagishna Xavier) துடிப்பான இசையும், SR. தூசிகரனின் கிரிஸ்ப்பான படத்தொகுப்பும் (Film Editor) படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளன. இன்று வெளியாகியுள்ள புதிய சிங்களத் தலைப்பு போஸ்டருடன் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இருமடங்காக உயர்த்தியுள்ள 'TVK' திரைப்படத்தின் ஒட்டுமொத்தப் படக்குழுவிற்கும் Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்