THIRAI MURASU | CINEMA NEWS UPDATES

பிரிவுகள்

சாம்பல் பேசும் வரலாறு! — `வன்செயல் 1983` குறும்படத்தின் First Look Title வெளியீடு!

05 Jul, 2026

Snap Studios-இன் 10ஆவது தயாரிப்பு என்பது மட்டுமே இந்தக் குறும்படத்திற்கு ஒரு தனி எடை சேர்க்கிறது. அந்த சிறப்பான பயணத்தின் தொடர்ச்சியாக உருவாகி வரும் 'வன்செயல் 1983' குறும்படத்தின் First Look மற்றும் Title இப்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.


"சாம்பல் பேசும் வரலாறு!"...

இந்த ஒரு வரியே போதும் — 'வன்செயல் 1983' என்ன சொல்ல வருகிறது என்பதை உணர. 1983 என்ற காலகட்டத்தை மையமாகக் கொண்டு, வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி வரும் இந்தக் குறும்படம் இலங்கைத் தமிழ் சினிமாவில் ஒரு துணிச்சலான படைப்பாக அமையும் என்று முன்னோட்டமே உணர்த்துகிறது. Title Reveal Promo சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருவது இந்த எதிர்பார்ப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.


படைப்பின் பின்னணி...

இந்தக் குறும்படத்தை யு.ஆர். பவித்ரன் எழுதி இயக்கியுள்ளார். டேன் மின்னோரின் ஒளிப்பதிவிலும், கருண் ஹேயின் இசையிலும் உருவாகும் இந்தப் படைப்பில் மிதுர்சன் ஜெயவீரசிங்கம் மற்றும் ஹரிபிரியன் தேவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


அடுத்தடுத்த அறிவிப்புகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வரும் நிலையில், 'வன்செயல் 1983' குறும்படக் குழுவினர் அனைவருக்கும் Thirai Murasu குழுவின் வாழ்த்துக்கள்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்

உங்கள் கருத்தைப் பகிருங்கள்