கர்ணன் படைப்பகம் தயாரிப்பில், Marathan Boys Entertainment இணைத் தயாரிப்பில், வின்னிதன்எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படமான ‘வீரம் உடையாது’, இன்று அக்டோபர் 23, 2026முதல் யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் பார்வையாளர்களைச் சந்திக்கிறது.
திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு வெளியாகியுள்ள புதிய போஸ்டரில் முக்கிய கதாபாத்திரங்கள் முன்னிறுத்தப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் நடைபெறும் சிறப்புக் காட்சிகளுக்கான நேரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
“மயங்கி கிடந்த ஒருவனின் கண்ணில் பட்ட ஒரு நீர்த்துளி போல…”
“மயங்கி கிடந்த ஒருவனின் கண்ணில் பட்ட ஒரு நீர்த்துளி போல எனக்கு ‘வீரம் உடையாது’” என்ற வரியுடன், திரைப்படத்தின் உருவாக்கப் பயணத்தின் உணர்வை இயக்குநர் வின்னிதன் பகிர்ந்துள்ளார்.
நீண்டகால முயற்சி மற்றும் படக்குழுவின் கூட்டு உழைப்புக்குப் பின்னர், ‘வீரம் உடையாது’ இன்று யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் தனது திரைப்பயணத்தை ஆரம்பிக்கிறது.
வின்னிதனின் எழுத்து மற்றும் இயக்கம்
‘வீரம் உடையாது’ திரைப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தை வின்னிதன்மேற்கொண்டுள்ளார்.
வாழ்வியல் சூழல்கள், மனித உறவுகள் மற்றும் கதாபாத்திரங்களுக்கு இடையிலான மோதல்களை மையப்படுத்திய படைப்பாக திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுவரை வெளியிடப்பட்ட போஸ்டர்களில் பல்வேறு கதாபாத்திரங்கள் முன்னிறுத்தப்பட்டுள்ளமை, கதையின் மையத்தில் பல மனிதர்களின் வாழ்வும் அவர்களுக்கிடையிலான உறவுகளும் முக்கிய இடம் பெறுவதை சுட்டிக்காட்டுகிறது.
பிரசாந்த் கிருஷ்ணபிள்ளை இசை
திரைப்படத்திற்கு பிரசாந்த் கிருஷ்ணபிள்ளை இசையமைத்துள்ளார்.
நெவில் டெல் ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளதுடன், நிவென் சந்திரசேகர் துணை இயக்கம் மற்றும் படத்தொகுப்புப் பணிகளை கவனித்துள்ளார்.
ஒப்பனையை அகல், உதவி இயக்கத்தை சிவகுமார் ஜதுர்ஷன், தயாரிப்பு நிர்வாகத்தை சிவதினேஷ், விளம்பர வடிவமைப்பை ராஜீவன் தயாபரன் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர்.
பல கதாபாத்திரங்களுடன் ‘வீரம் உடையாது’
திரைப்படத்தில் சண்முகநாதன் சபேசன், உரேலு பாக்கி, பிரசன்னா பிரியதர்ஷன், ஜோனி ஆண்ட்ரென், எம்.ஜி. தெனு, எழிலிஷா அழகநாயகம், கீர்த்தி அவுரா, அன்டனி கிளாரன்ஸ், மதிசுதா, கிஜய் சுஜன், லக்கு எஸ்.கே.எல்., ஜாஷி ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
பல கதாபாத்திரங்களின் வாழ்க்கைச் சூழல்கள் மற்றும் அவர்களுக்கிடையிலான உறவுகள் வழியாகக் கதை விரிவடையும் படைப்பாக ‘வீரம் உடையாது’ பார்வையாளர்களைச் சந்திக்கிறது.
யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் சிறப்புக் காட்சிகள்
திரைப்படத்தின் முதல் கட்ட திரையிடல் யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் இடம்பெறுகிறது.
🎬 அக்டோபர் 23 — பிற்பகல் 2.30 மணி
🎬 அக்டோபர் 24 — மாலை 4.00 மணி
யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் இன்று தனது திரைப்பயணத்தை ஆரம்பிக்கும் ‘வீரம் உடையாது’திரைப்படத்தின் இயக்குநர் வின்னிதன், தயாரிப்புக் குழு, நடிகர்கள் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் திரைமுரசு ஊடகக் குழுமத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்