பெண்களின் துணிவு, உரிமை, எதிர்ப்பு மற்றும் தன்னம்பிக்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள ‘வீரமங்கை’ (VEERAMANGAI) இசை வீடியோ அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது.
The Third Eye Media Production தயாரிப்பில், Ilankeyan Pictures தயாரிப்பு ஒருங்கிணைப்பில் உருவான இந்தப் பாடலுக்கு Rap Lady Fire வரிகளை எழுதி, குரல் மற்றும் Rap பகுதிகளையும் வழங்கியுள்ளார். திஷோன் விஜயமோகன் (Thisheon Vijayamohan) இசையமைத்துள்ளதுடன், ரெஜி செல்வராசா (Reji Selvarasa) இயக்கம், ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
பெண்களின் உரிமையை முன்வைக்கும் ‘வீரமங்கை’
“அமைதியா இருந்தா அடிமையாத்தான் சாகணும்… நாங்க வெறும் அடுப்பூதுற கைகள் இல்ல…” என்ற தொடக்க வரிகளிலிருந்தே, பெண்களின் உரிமை மற்றும் சுயமரியாதையை நேரடியாக முன்வைக்கும் குரலாக பாடல் நகர்கிறது.
அடக்குமுறைக்கு எதிராக எழும் பெண்ணின் குரல், தடைகளை எதிர்கொள்ளும் மனவலிமை மற்றும் தன்னுடைய வரலாற்றை தானே எழுத வேண்டும் என்ற எண்ணம் ஆகியவை பாடலின் மையக் கருத்துகளாக அமைந்துள்ளன.
Rap Lady Fire-ன் வரிகளும் குரலும்
Rap வடிவில் அமைந்துள்ள பாடலின் வரிகள், எதிர்ப்பு மற்றும் உரிமை சார்ந்த கருத்துகளை நேரடியாக எடுத்துச் செல்கின்றன.
“விலங்குகளை அறுப்போம்… தடைகளை உடைப்போம்…”,
“நெருப்பாய் எழுந்தோம்… நிமிர்ந்தே நின்றோம்…”
போன்ற வரிகள் பாடலின் கருத்தை வலுப்படுத்தும் பகுதிகளாக இடம்பெற்றுள்ளன.
Rap Lady Fire-ன் பிரதான குரலுடன் அருணன் சுரேந்திரன் மற்றும் தாட்சாயினி உதயகுமார் ஆகியோரின் பின்னணிக் குரல்களும் பாடலில் இணைந்துள்ளன.
ரெஜி செல்வராசாவின் காட்சியமைப்பு
கடற்கரை, மணற்பரப்பு, பனை மரங்கள் உள்ளிட்ட இலங்கைத் தமிழ் நிலப்பரப்புகளை பின்னணியாகக் கொண்டு ‘வீரமங்கை’ படமாக்கப்பட்டுள்ளது.
கறுப்புக் கொடிகள், குழு நடன அமைப்புகள் மற்றும் Rap Lady Fire-ஐ மையப்படுத்திய காட்சிகள் வழியாக பாடலின் கருத்தை காட்சியாக எடுத்துச் செல்லும் அணுகுமுறையை இயக்குநர் ரெஜி செல்வராசா பயன்படுத்தியுள்ளார்.
நடன இயக்கத்தை Krishan மற்றும் Thanusa மேற்கொண்டுள்ளனர்.
இசையின் வழியாக பெண்களின் குரல்
பெண்களின் வீரத்தையும் உரிமையையும் Rap இசை வடிவில் பேசும் படைப்பாக ‘வீரமங்கை’ வெளியாகியுள்ளது. பாடல் வரிகள் முதல் காட்சியமைப்பு வரை ஒரே கருத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பது இதன் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.
‘வீரமங்கை’ இசைப் படைப்பில் பங்களித்த Rap Lady Fire, இசையமைப்பாளர் Thisheon Vijayamohan, இயக்குநர் Reji Selvarasa மற்றும் முழுக் கலைஞர் – தொழில்நுட்பக் குழுவினரின் தொடர்ந்த கலைப் பயணம் சிறப்பாக அமைய Thirai Murasu ஊடகக் குழுமத்தின் மனமார்ந்த வாழ்த்துகள்!

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்