இசையமைப்பாளர் ரெக்ஸி பிரின்ஸ் (Rexy Prince) இசையில் உருவாகியுள்ள ‘யாமினி’ (Yaamini)பாடலின் அதிகாரப்பூர்வ மியூசிக் வீடியோ, Rexy Tunes யூடியூப் தளத்தில் வெளியாகியுள்ளது.
காதல் உணர்வுகளை மையமாகக் கொண்ட மெலடி பாடலாக உருவாகியுள்ள ‘யாமினி’க்கு விஸ்வா (Visva)குரல் வழங்கியுள்ளதுடன், பாடல் வரிகளை லீமா (Leema) எழுதியுள்ளார். தக்ஷன் (Thakshan) மற்றும் எஸ். சிந்து (S. Sinthu) ஆகியோர் மியூசிக் வீடியோவில் நடித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தின் அழகிய பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ள இதன் ஒளிப்பதிவை அங்குஷன் (Angushan) மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பு மற்றும் Color Grading பணிகளை ரெக்ஸ் (Rex) மேற்கொண்டுள்ளதுடன், Mixing & Mastering பணிகள் RD Studioவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
புதிய இசைப் படைப்பை வெளியிட்டுள்ள ரெக்ஸி பிரின்ஸ், விஸ்வா, லீமா, தக்ஷன், எஸ். சிந்து மற்றும் ‘யாமினி’ படைப்புக் குழுவினருக்கு Thirai Murasu குழுவின் வாழ்த்துக்கள்.

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்