தமிழ்த் தொலைக்காட்சி இசை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் முக்கிய இடம்பிடித்துள்ள Zee Tamil ‘சரிகமப சீனியர்ஸ்’ (SaReGaMaPa Seniors) நிகழ்ச்சிக்கான நேரடி குரல் தேர்வு இலங்கையில் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு ஆகிய இரண்டு நகரங்களில் நடைபெறும் இந்தத் தேர்வுகளில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பாடகர்கள் பங்கேற்க முடியும்.
இலங்கையிலுள்ள திறமையான பாடகர்களுக்குத் தங்களது குரல் திறனை வெளிப்படுத்தி, தொலைக்காட்சி இசை மேடையை நோக்கிப் பயணிப்பதற்கான வாய்ப்பாக இந்த நேர்முகத் தேர்வு அமைகிறது.
📍 யாழ்ப்பாணம் & கொழும்பில் நேரடி Audition
யாழ்ப்பாணம்
திகதி: ஆகஸ்ட் 23, 2026 — ஞாயிற்றுக்கிழமை
நேரம்: காலை 10:00 மணி முதல்
இடம்: Tilco – Jaffna City Hotel
முகவரி: இல. 70/6, KKS Road, யாழ்ப்பாணம்
கொழும்பு
திகதி: ஆகஸ்ட் 24, 2026 — திங்கட்கிழமை
நேரம்: காலை 10:00 மணி முதல்
இடம்: Tower Hall Theatre Foundation
முகவரி: இல. 123, விஜேராம மாவத்தை, கொழும்பு 07
🎤 யார் பங்கேற்கலாம்?
நேர்முகத் தேர்வில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் பங்கேற்கலாம். தேர்வுக்குச் செல்லும்போது பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் வயதை உறுதிப்படுத்தக்கூடிய செல்லுபடியாகும் அடையாள ஆவணம் ஆகியவற்றை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
📞 மேலதிக விபரங்களுக்கு
தொடர்பு: +94 71 042 3893
Email: saregamapaseniors@zee.com
இலங்கையின் பல பகுதிகளிலும் இசைத்துறையில் தங்களுக்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பாடகர்களுக்கு, ‘சரிகமப சீனியர்ஸ்’ மேடையை நோக்கிய முக்கிய வாய்ப்பாக இந்த நேர்முகத் தேர்வு அமைந்துள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் நடைபெறும் தேர்வுகளில் பங்கேற்கவுள்ள அனைத்து இலங்கைத் தமிழ் இசைக் கலைஞர்களுக்கும் Thirai Murasu குழுவின் வாழ்த்துக்கள்.

கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்