ஜீ தமிழ் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற 'மகாநடிகை' (Mahanadigai) நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று, தனது இயல்பான நடிப்பினாலும் கனிவான புன்னகையினாலும் தமிழ்நாட்டு ரசிகர்களின் இதயங்களை வென்று வருபவர் ஈழத்துத் தமிழ் பெண் நிவேதிகா ராசையா (Nivedhikah Rasaiah).
சமீபத்தில் 'போராட்டம்' திரைப்படத்திலும் முதன்மைப் பாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்த நிவேதிகா, தற்போது சின்னத்திரையின் முன்னணி தளாமான ஜீ தமிழின் 'மகாநடிகை' தளத்தில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.
படப்பிடிப்புத் தளத்தில் கலகலப்பான தருணங்கள்!
'மகாநடிகை' தளத்தின் பின்னணியில், 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' மற்றும் 'மகாநடிகை' புகழ் நவீன் (Naveen) உடனுடன் சேர்ந்து நிவேதிகா ராசையா எடுத்துக்கொண்ட கலகலப்பான மற்றும் அழகிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இலங்கையிலிருந்து சென்று தமிழகத்தின் பிரம்மாண்ட மேடையில் தனது திறமையை நிரூபித்து வரும் நிவேதிகா ராசையாவிற்கு Thirai Murasu குழுவின் மனமார்ந்த வாழ்த்துக்கள்!






கருத்துக்கள் மற்றும் பகிர்வுகள்